விடுதலையான பாரதிய ஜனதா கட்சியினருக்கு சிறை வாசலில் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தவர்கள் மீது மீண்டும் வழக்கு பதிவு. - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 9 October 2022

விடுதலையான பாரதிய ஜனதா கட்சியினருக்கு சிறை வாசலில் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தவர்கள் மீது மீண்டும் வழக்கு பதிவு.

சிறையில் இருந்து விடுதலையான பாரதிய ஜனதா கட்சியினருக்கு சிறை வாசலில் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தவர்கள் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


திமுக எம்.பி  ஆ.ராசா, இந்து மதம் குறித்து பேசியிருந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் பாஜகவினர் போராட்டங்களை நடத்தினர். 


அதன்படி கோவையில் பாஜக பிரமுகரான பாலாஜி உத்தம ராமசாமி என்பவர் பெரியார் குறித்தும், திமுக எம்.பி ஆ.ராசா குறித்தும் அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். அவருடைய கைதை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜகவினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்து வந்த பாஜகவினரை கோவை மத்திய சிறையின் வாசலிலேயே மேளதாளத்துடன் வரவேற்க பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் போலீசாரின் தடையை மீறி மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் பாஜகவினருக்கும், காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 


இந்நிலையில் போலீசாரின் உத்தரவை மீறிய பாஜகவின் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட 7 பேர் மீது  இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad