15 நிமிடங்கள் இடைவிடாது நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கருவிகளை வாசித்து சாதனை. - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 14 June 2026

15 நிமிடங்கள் இடைவிடாது நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கருவிகளை வாசித்து சாதனை.


கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் அமைந்துள்ள எஸ் ஆர் எஸ் கல்யாண மண்டபத்தில் இசை கலைஞர்களான நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்கள் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அது கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இடைவிடாது நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கருவிகளை வாசித்து ஒரு பெரிய சாதனைக்கு முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளனர் .

இதில் சுமார் 88 கலைஞர்கள் சேர்ந்து இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் இதற்கு சான்றிதழ் வழங்குவதற்காக (யோகா வேர்ல்ட் ரெக்கார்ட்) எனும் அமைப்பு முன்வந்து சான்றிதழ்களை வழங்கி உள்ளனர்.



இந்த நிகழ்வில் ஒருங்கிணைப்பு தலைவர்  திரு . ஆண்டவன் அவர்கள் மற்றும் துணைத் தலைவர்.திருமதி மீனா அவர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் இசைக்கருவிகள் இல்லாத கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் வேண்டும் என்றும் இசைக் கலைஞர்களுக்கு கோவில் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்குபெற அரசு பணிகளும் வழங்கிட வேண்டும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது .


தமிழக குரல் செய்திகளுக்காக 

சூலூர் தாலுகா செய்தியாளர் 

ர.சுப்ரமணியம்.

No comments:

Post a Comment

Post Top Ad