கோவை, டிசம்பர் 21:
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா ராசிபாளையம் கிராமத்தில், கடந்த டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய இரு நாட்களில் மாபெரும் தொடர் கபாடி போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த போட்டியை கோவை ஸ்போர்ட்ஸ் மற்றும் ராசிபாளையம் கிராம மக்கள் இணைந்து நடத்தினர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த தொடர் கபாடி போட்டியில் கோவை ஸ்போர்ட்ஸ் கிளப் அங்கத்தினர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பக்கத்து ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள், ராசிபாளையம் கிராம பொதுமக்கள் ஆகியோர் உற்சாகமாக கலந்து கொண்டு போட்டிகளை நடத்தி வந்தனர். விளையாட்டு மனப்பாங்கும் ஒற்றுமையும் வெளிப்படும் வகையில் போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளை காண அருகிலுள்ள ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர் மக்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கிராம அளவில் நடத்தப்பட்ட இந்த கபாடி போட்டி, இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு, சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தியதாகப் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment