தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக திருப்பதிக்கு கோவை சேலம் திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் பேருந்தை மாவட்ட ஆட்சியர் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து கொடியசைத்தே இன்று தொடங்கி வைத்தார். நான்காயிரம் ரூபாய் கட்டணத்தில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் திரும்பும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் இரண்டு வேளை சைவ உணவும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் திருப்பதி செல்ல விரும்பும் பொதுமக்கள் www.ttdconline.com என்ற இணையதளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம் அல்லது காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் திருப்பதியில் அறைகள் வழங்கப்படும் என்றும் வழிகாட்டி ஒருவர் உடன் இருப்பார் எனவும் திருப்பதி சுவாமி தரிசனம் மற்றும் அலமேலு மங்கை தரிசனத்திற்கு அழைத்துச் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் கோவையில் இருந்து திருப்பதிக்கு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment